பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் களை கட்டிய பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இந்தாண்டு பொங்கல் விழா களை கட்டியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றி வந்ததால், விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை சேர்ந்தவர்கள் பொங்கல் விழாவில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு, மாவட்டத்தில் போதிய பருவமழை பெய்ததால், விவசாயிகள் நெல் உள்ளிட்ட, இறவை பாசன பயிர்கள் மற்றும் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்தனர். இதில் மகசூல் அதிகரித்ததுடன், விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைத்ததுடன், விவசாய தொழிலாளர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு கிடைத்தது. இதனால், இன்று பொங்கல் பண்டிகை நடக்கவுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் நேற்று காலை இருந்தே அலங்கார தோரணங்கள், விளையாட்டு போட்டிகள் நடந்த திடல்கள் சீரமைப்பு, பந்தல், மேடை, சீரியல் செட் அமைக்கும் பணி, மைக் செட் கட்டும் பணியில், பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் முதலே பாடல்கள் ஒலிக்க பொங்கல் விழா களை கட்ட துவங்கியது. சிறுவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


* தர்மபுரி பி.டி.ஓ., அலுவலகத்தில், பி.டி.ஓ.,க்கள் ஆறுமுகம் மற்றும் ரவிச்சந்திரன் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.பி.,ராஜன் தலைமையிலும், டவுன் போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலும் பொங்கல் விழா நடந்தது. இதேபோல், பல்வேறு அரசு அலுவலகங்களில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X