சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி இருவர் பலி

Added : ஜன 15, 2020
Advertisement

தர்மபுரி: பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், இருவர் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி அடுத்த செல்லியம்பட்டியை சேர்ந்தவர் மரியலூக்காஸ், 21. இவர், நேற்றிரவு, 9:30 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் அந்தோணி, 20, என்பவருடன், பஜாஜ் பிளாட்டினா பைக்கில், தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கடகத்தூர் அரசு ஐ.டி.ஐ., அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி உள்ளது. இதில் படுகாயமடைந்த, மரியலூக்காஸ், அந்தோணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X