பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.25.37 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

Added : ஜன 15, 2020
Advertisement

மொடக்குறிச்சி: கொடுமுடியில். 25.37 லட்சம் ரூபாய்க்கு, தேங்காய் பருப்பு ஏலம் போனது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 605 மூட்டைகளில், 29 ஆயிரம் கிலோ வரத்தானது. முதல் தரம், ஒரு குவிண்டால், 10 ஆயிரத்து, 489 ரூபாய், குறைந்த பட்சம் 9,710 ரூபாய், சராசரியாக, 10 ஆயிரத்து, 85 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 25 லட்சத்து, 37 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வார ஏலத்தை ஒப்பிடுகையில், 69 ரூபாய் குவிண்டாலுக்கு விலை கூடியது. இதேபோல் தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 15 ஆயிரத்து, 866 காய்கள் வரத்தாகின. ஒரு டன், 25 ஆயிரத்து, 650 ரூபாய் முதல், 33 ஆயிரத்து, 190 ரூபாய் வரை விலை போனது. கடந்த வார ஏலத்தை ஒப்பிடுகையில், 2,300 ரூபாய் டன்னுக்கு, விலை அதிகரித்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X