பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி இடத்தை தனிநபருக்கு வழங்கிய வருவாய்த்துறை: வீடு கட்டவும் அனுமதி வழங்கி அதிகாரிகள் தாராளம்

Added : ஜன 15, 2020
Advertisement

ஓசூர்: ஓசூர், மாநகராட்சிக்கு சொந்த மான இடத்துக்கு வருவாய்த்துறை பட்டா வழங்க, மாநகராட்சி நிர்வாகமும் வீடு கட்ட அனுமதி வழங்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பழைய ஹட்கோ பகுதி பேஸ், 14ல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம், 1977ல் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டது. இங்கு, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய, 23 சென்ட் காலியிடம் (சர்வே எண்: 866) இருந்தது. இங்கு, அடிப்படை வசதிகளை செய்ய, அப்போதைய ஓசூர் டவுன் பஞ்., வசம், பழைய ஹட்கோ பகுதி ஒப்படைக்கப்பட்டது. 2008 வரை பயன்பாட்டில் இருந்த தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி தற்போது காணவில்லை. மாநகராட்சியின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காலியிடத்தின் பெரும்பகுதி, பட்டா போட்டு தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில், தற்போது அடுக்குமாடி வீடுகள் உதயமாகி உள்ளன. கடந்த, 2008ல், சங்கர் என்பவர், பழைய ஹட்கோ பகுதியில், 866/1 என்ற சர்வே எண்ணில் இருந்த (டாக்குமெண்ட் எண்: 10723) 9.5 சென்ட் நிலத்தை, தனிநபரிடமிருந்து விலைக்கு வாங்கி, அதை பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளார். அதே சர்வே எண்ணின், தாய் பத்திரம் மூலம், மாநகராட்சிக்கு சொந்தமான, 866 சர்வே எண்ணில் தண்ணீர் தொட்டியுடன் இருந்த நிலத்தை அபகரித்து, தன் மனைவி கவிதா பெயரில் தான பத்திரமாக வழங்கினார். அதன் பின், இந்த நிலம் பிளாட் போட்டு தனிநபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். மாநகராட்சி இடம் என்பதையறிந்த அதிகாரிகளும், 'கவனிப்பு' காரணமாக, பட்டா வழங்கி உள்ளனர். மாநகராட்சி நிர்வாகமும், வீடு கட்ட அனுமதி வழங்கி உள்ளது. சில தனியார் வங்கியில், பலர் கடன் வாங்கி வீடும் கட்டினர். சிலர் தற்போது வீடு கட்டியும் வருகின்றனர். நிலம் தங்களது என்பதை, தாமதமாக அறிந்த மாநகராட்சி நிர்வாகம், நேற்று முன்தினம் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியது. 'கவனிப்பு' காரணமாக சரியாக ஆய்வு செய்யாமல், மாநகராட்சி இடத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் பீதியில் உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் தப்பிக்க, வருவாய்த்துறை வசம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிலத்தை வழங்கியது போல், ஆவணங்களை மாற்ற முயற்சி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சங்கர் என்ற குபேந்திரன் செய்த இந்த மோசடியால், மாநகராட்சி இடம் என, தெரியாமல் விலைக்கு வாங்கி வீடு கட்டியவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது, கேட்டு சொல்கிறேன்,'' என்றார்.

யார் இந்த சங்கர்: ஓசூர் மாநகராட்சி பழைய, 37வது வார்டு, அ.தி.மு.க., செயலாளார் தான், அந்த சங்கர். இவர், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை தன் மனைவிக்கு தான பத்திரமாக வழங்கி, பலருக்கு விற்பனை செய்துள்ளார். இவர் மீது, என்ன நடவடிக்கை எடுப்பது என, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இது குறித்து சங்கர் கூறியதாவது: ஓசூர் மாநகராட்சி, 41வது வார்டில் போட்டியிடுவது தொடர்பாக, எனக்கும், மற்றொரு கட்சியை சேர்ந்தவருக்கும் பிரச்னை உள்ளது. அதனால் கடந்த, 2007ல் வாங்கிய நிலத்தை வைத்து, தற்போது பிரச்னை செய்கின்றனர். நிலத்திற்கு பட்டா உள்ளது. நிலம் வாங்கியவர்கள் பலர், வங்கி கடன் வாங்கி உள்ளனர். நிலத்தில் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X