சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு காய்கறி விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு காய்கறி விற்பனை

Added : ஜன 15, 2020
Share
சேலம்: சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், 330 டன் காய்கறி, பழங்கள் மூலம், 1.02 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், காய்கறி, பழம் வாங்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. அதில், சேலம் மாநகரின், சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உழவர்சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 175 டன், 846 கிலோ காய்கறி மூலம், 53 லட்சத்து,

சேலம்: சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், 330 டன் காய்கறி, பழங்கள் மூலம், 1.02 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், காய்கறி, பழம் வாங்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. அதில், சேலம் மாநகரின், சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உழவர்சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 175 டன், 846 கிலோ காய்கறி மூலம், 53 லட்சத்து, 67 ஆயிரத்து, 475 ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. அதேபோல், மாவட்டத்தில், ஆத்தூர், இடைப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி உழவர் சந்தைகளில், 154 டன், 236 கிலோ காய்கறி மூலம், 49 லட்சத்து, 15 ஆயிரத்து, 310 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. குறிப்பாக, செங்கரும்பு, மஞ்சள், பூல இலை ஆகியவை அதிகளவில் விற்றன. பொங்கல் பண்டிகையான இன்றும், விற்பனை களைகட்டும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X