பனிப்பொழிவால் பனை வெல்ல உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனிப்பொழிவால் பனை வெல்ல உற்பத்தி பாதிப்பு: வரத்து சரிவால் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்வு

Added : ஜன 15, 2020

சேலம்: பனிப்பொழிவு தாக்கத்தால், பனைவெல்ல உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு, வரத்து சரிந்து, அதன் விலை கிலோவுக்கு, 400 ரூபாய் உயர்ந்தது.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரியில், பனைவெல்லம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில், பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து, அதன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், சீசன் தொடங்க, ஒரு மாதமே உள்ளதால், விலை உயர்வை எதிர்பார்த்து, பனை வெல்ல வியாபாரிகள் இருப்பு வைத்து வருகின்றனர். கடந்த மாதம் வரை, தமிழக மார்க்கெட்டுகளுக்கு வாரம், 100 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த பனைவெல்லம், தற்போது, 50 லாரிகளாக சரிந்துள்ளது. இதனால், அதன் விலை, நேற்று கிலோவுக்கு, 40 ரூபாய் உயர்ந்தது. அதன்படி, முதல் ரகம் கிலோ, 260க்கு விற்றது, 300 ரூபாய், இரண்டாம் ரகம், 220க்கு விற்றது, 260 ரூபாய், மூன்றாம் ரகம், 200க்கு விற்றது, 240 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X