தமிழ்நாடு

'குடியுரிமை சட்ட திருத்தத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை'

Added : ஜன 15, 2020
Advertisement

ஓமலூர்: ''குடியுரிமை சட்ட திருத்தத்தால், சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.
பொங்கல் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சென்னையிலிருந்து, முதல்வர் பழனிசாமி, விமானம் மூலம், நேற்று மதியம் சேலம் வந்தார். அங்கிருந்து, ஓமலூர் அருகேவுள்ள, அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு, மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக, தமிழக எல்லைப்பகுதியான கடல், தரை வழி பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மறைமுக தேர்தலில், முறைகேடு நடக்கவில்லை. குறிப்பாக, முதல்வர் மாவட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை. நங்கவள்ளி, ஏற்காடு, ஆத்தூர் உள்ளிட்ட ஒன்றியங்களில், அ.தி.மு.க.,வினர் மிக குறைந்த ஓட்டுகளில் தோல்வியடைந்தனர். தேர்தல் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட்டுள்ளனர். வேண்டு மென்றே, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மரணம் குறித்து, முழு விசாரணை வரவில்லை. குடியுரிமை சட்ட திருத்தத்தால், சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அரசியல் லாபத்துக்கு, அந்த மக்கள் அச்சப்படும்படி சிலர் செயல்படுகின்றனர். அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம். அ.தி.மு.க., ஆட்சி அமைய, பா.ம.க., காரணம் என அன்பு மணி பேசியது, அவர்களது கட்சியினரை ஊக்குவிக்க, சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக அரசு, சிறப்பாக ஆட்சி செய்வதால், மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் விமானம் தாமதம் ஏன்? போகி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில், நேற்று காலை பழைய பொருட்களை, பலர் எரித்தனர். இதனால் ஏற்பட்ட புகை, பனிமூட்டத்தால், சென்னை விமான நிலையம், புகை மண்டலமாக மாறியது. இதனால், 10:30 மணிக்கு சேலம் புறப்படவேண்டிய விமானம், தாமதமாக, 11:50க்கு புறப்பட்டது. அதில் பயணித்த முதல்வர் பழனிசாமி, 12:50 மணிக்கு, சேலம், காமலாபுரம் விமான நிலையம் வந்தார். அங்கு, கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, அ.தி.மு.க., நிர்வாகிகள், நீண்ட வரிசையில் நின்று சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X