Maharashtra Deputy Chief Minister Ajit Pawar filed an affidavit in the Nagpur Bench of Bombay High Court seeking dismissal of petitions filed against him in the irrigation scam. | நீர்பாசன ஊழல் வழக்கு: விடுவிக்க கோரி அஜித்பவார் மனு| Dinamalar

நீர்பாசன ஊழல் வழக்கு: விடுவிக்க கோரி அஜித்பவார் மனு

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (13)
Maharashtra, DeputyChiefMinister, AjitPawar, affidavit, Nagpur Bench, BombayHighCourt, irrigation_scam, நீர்பாசன ஊழல், வழக்கு, அஜித்பவார்

இந்த செய்தியை கேட்க

நாக்பூர் : நீர்பாசன ஊழல் வழக்கு: விடுவிக்க கோரி, மஹா., துணை முதல்வர் அஜித்பவார் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், முந்தைய காங். - தேசியவாத காங். கூட்டணி ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சராகவும், விதர்பா நீர்பாசன மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும் அஜித் பவார் இருந்த போது நீர் பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில், ரூ. 70 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக அஜித் பவார் மற்றும் அதிகாரிகள் மீது, மாநில ஊழல் தடுப்பு போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நடந்து வருகிறது.



மஹாராஷ்டிரா சட்டசபைக்கு, கடந்தாண்டு நடந்த தேர்தலில், பா.ஜ., - கூட்டணிக்கு அஜித்பவார் ஆதரவு அளிப்பதாக கூறி துணை முதல்வராக பொறுப்பேற்றார். உடன் அஜித்பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர், அவர் பதவி விலகினார்.தற்போது சிவசேனா - தேசியவாத காங். கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக உள்ளார்.





இந்நிலையில் நேற்று(ஜன., 14) மும்பை உயர்நீதிமன்றத்தில் அஜித் பவார் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன்மீதான ஊழல் வழக்கு பொய்யானவை. உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X