பொது செய்தி

இந்தியா

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு கவுரவிப்பு

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (11)
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கேரள அரசு கவுரவித்தது.

சபரிமலை தேவசம் போர்டும், கேரள மாநில அரசும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி வருகிறது. சபரிமலையின் புகழை பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதினை இதற்கு முன்னதாக, கே.ஜே.யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதினை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்று (ஜன.,15) விருது வழங்கப்பட்டது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், 'Worshipful Music Genius' என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு விருது வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
16-ஜன-202008:24:08 IST Report Abuse
ரத்தினம் திருவாசகத்துக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். அதை நாம் கண்டு கொள்வதில்லை. இளைய ராஜா போற்றத்தக்கவர்.
Rate this:
Share this comment
Cancel
n.palaniyappan - karaikal ,இந்தியா
16-ஜன-202006:35:31 IST Report Abuse
n.palaniyappan N.Palaniyappan karaikal. Ilayaraja sir we got most fortune our life. He is one of the best musician in the world. This award is one of the diamond in his crown.
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
15-ஜன-202019:29:11 IST Report Abuse
Ray எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நியதியை கொண்டு வந்தவர்கள் பாரதி ராஜாவும் இளைய ராஜாவும் இன்று எத்தனை எத்தனை இசையமைப்பாளர்கள் பின்னணியிசைப் பாடகர்கள் கர்னாடக இசை வல்லுனர்களும் சினிமா இசையை விரும்பினார்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X