பொது செய்தி

இந்தியா

சிறை விதிமுறைகளை மீறிய நிர்பயா குற்றவாளிகள்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (14)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : மருத்துவ மாணவி ' நிர்பயா' பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், சிறையில் இருந்த கடந்த 7 ஆண்டுகளில் 4 பேரும் சேர்ந்து 23 முறை சிறை விதிகளை மீறியுள்ளனர்.







டில்லியை சேர்ந்த 'நிர்பயா' என்ற மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, படுகாயமடைந்து மரணமடைந்த வழக்கில், வினய்சர்மா, முகேஷ் குமார், அகசய் குமார், பவன் குப்தா ஆகியோருக்கு வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.





தூக்கு தண்டனையை நிறைவேற்ற, திஹார் சிறையில் ஊழியர் இல்லாததால், உ.பி., மாநிலம் மீரட்டில் உள்ள ஊழியரை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு பேரையும் தூக்கில் போடுவதற்காக , அவருக்கு, ரூ.60 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. தூக்கில் இருந்து தப்பிக்க கடைசி முயற்சியாக முகேஷ் குமார் மற்றும் வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை நேற்று (ஜன.,14) உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.






இந்நிலையில் திஹார் சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், குற்றவாளிகள் நான்கு பேரும் சிறையில் இருந்த போது 23 முறை விதிகளை மீறியதற்காக தண்டனை பெற்றுள்ளனர். வினய் 11 முறையும், அக்சய் ஒரு முறையும், முகேஷ் 3 முறையும், பவன் 8 முறையும் சிறை விதிமுறைகளை மீறியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் முகேஷ் , சிறையில் எந்த பணியையும் செய்யவில்லை. மற்ற மூவரும் வேலை பார்த்தனர். அவ்வாறு வேலைபார்த்ததில், அக்சய் ரூ.69 ஆயிரம், பவன் ரூ.29 ஆயிரம், வினய் ரூ.39 ஆயிரம் ஊதியம் பெற்றுள்ளனர். கடந்த 2016ல் பவன், முகேஷ் மற்றும் அக்சய் ஆகியோர் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதினர். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. 2015 ல் வினய் பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் முடிக்கவில்லை. தூக்கில் போடுவதற்கு முன்னர் குற்றவாளிகள் மூன்று முறை குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். வினய் மிகவும் கவலையாக காணப்படுகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
16-ஜன-202008:24:04 IST Report Abuse
Nallavan Nallavan சிறை அதிகாரிகள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தானுங்க ?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-ஜன-202005:51:05 IST Report Abuse
D.Ambujavalli என்ன கவலை? சீராய்வில் அனுமதித்து அரசு,செலவில் ஆயுள் கிடைத்தபின் ஆளைப்பிடித்து, காசை வீசி வெளியே வரலாம் என்றெல்லாம் எதிர்பார்த்தான் போலிருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-ஜன-202005:32:04 IST Report Abuse
Mani . V "சிறையில் இருந்த கடந்த 7 ஆண்டுகளில் 4 பேரும் சேர்ந்து 23 முறை சிறை விதிகளை மீறியுள்ளனர்" - சரி அதுக்கு என்ன கிழிக்கப் போகிறார்கள்? விடுதலைதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X