பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம் வரலாற்று சிறப்புமிக்கது: ராணுவ தளபதி

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (15)
Advertisement
ArmyDay,armychief, manojmukung, PmModi, Narendramodi, PmNarendramodi, PresidentRamanthkovind, ramnathkovind, ramnath, Presidentramnath, terrorism, rajnath, rajnathsingh, Defenceminister, Defence minister Rajnathsingh,  பயங்கரவாதம், ராணுவதினம், ராணுவதளபதி, மனோஜ்முகுந்த்நரவானே, பிரதமர் மோடி, மோடி, பிரதமர், நரேந்திரமோடி, பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி, ஜனாதிபதி ராம்நாத், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்,  ராஜ்நாத்சிங்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பயங்கரவாதத்தை பொறுத்து கொள்ள மாட்டோம். அதற்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.


மரியாதை
இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு, டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி பதூரியா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.


வலிமை அதிகரிப்பு
ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட பின்னர் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் கூறுகையில், முன்னரை விட ராணுவத்தின் திறன் அதிகரித்துள்ளது. பயங்கரவாதத்தை பொறுத்து கொள்ள மாட்டோம். அதற்கு உரிய முறையில் பதிலடி கொடுப்போம். இதற்கான பல வாய்ப்புகள் ராணுவத்தின் முன் உள்ளது. இதனை பயன்படுத்த நாங்கள் தயங்கவில்லை. எல்லை பகுதிகளை வலிமையுடன் பாதுகாத்து வருகிறோம். காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டது வரலாற்று சிறப்பு வாய்ந்தது.இதனால், நமது மேற்கத்திய அண்டை நாட்டின் திட்டமும், மறைமுக போரும் பாதித்தது. இந்த நடவடிக்கை, காஷ்மீர் மாநிலத்தை தேசிய நீரோட்டத்துடன் இணைத்தது. இவ்வாறு அவர் பேசினார்.ஜனாதிபதி வாழ்த்து

இந்திய ராணுவத்தை வாழ்த்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
ராணுவ தினத்தில், ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் தான் நாட்டின் பெருமைக்குரியவர்கள். சுதந்திரத்தை காத்துநிற்கிறீர்கள். உங்களின் தியாகம் தான், நமது இறையாண்மையை காப்பதுடன், நாட்டின் பெருமையை உயர்த்தி, மக்களை பாதுகாக்கிறது. ஜெய்ஹிந்த். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.


பெருமைப்படுவோம்

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி: வீரத்திற்கும், அர்ப்பணிப்புக்கும் நமது ராணுவம் பெயர் பெற்றது. மனித உரிமையை மதித்து நடக்கிறது. மக்களுக்கு உதவி தேவைப்படும் போது எல்லாம், முன்னால் வந்து நிற்பதுடன், தன்னால் இயன்ற உதவியை செய்யும். நமது ராணுவத்தை நினைத்து பெருமை கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், வாழ்த்து செய்தியுடன், ''கடும் பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்ட கர்ப்பிணியை, 100 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி 4 மணி நேரம் நடந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த காட்சிகள் அடங்கிய, இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோவை ரிடுவீட் செய்துள்ளார். மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தை நலமாக உள்ளனர். அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற வேண்டி கொள்வதாக மோடி கூறியுள்ளார்.
சல்யூட்...

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட வாழ்த்து செய்தி
ராணுவ தினத்தை முன்னிட்டு, நமது தைரியமிக்க ராணுவ வீரர்களுக்கு சல்யூட் செய்கிறேன். நாட்டை பாதுகாப்பானதாக வைக்க, ராணுவ வீரர்களின் வீரம், தைரியம் மற்றும் தியாகத்தை நினைவுகூர்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath, k - HOSUR,இந்தியா
15-ஜன-202019:03:14 IST Report Abuse
sampath, k Integrity of these official is questionable. They are not empowered to give media statements frequently without any necessary. He should be loyal to his post, not for Rulers
Rate this:
Share this comment
Cancel
Amreen - Connecticut,யூ.எஸ்.ஏ
15-ஜன-202018:28:26 IST Report Abuse
Amreen 70 ஆண்டு காலமாக சிகுலர் அரசியல்வாதிகள் நம்மை எப்படி ஏமாற்றி உள்ளனர் காஷ்மீரி மாணவன் இந்தியா முழுவதும் சேர்ந்து படிக்கலாம். ஆனால் மற்ற மாநில மாணவர்கள் அங்கு சேர்ந்து படிக்கச் முடியாது. காஷ்மீரி இந்தியா முழுவதும் சொத்துக்களை வாங்கலாம். ஆனால் மற்ற மாநில மக்கள் அங்கு ஒரு சென்ட் நிலம் வாங்க முடியாது. காஷ்மீரி இந்தியா முழுவதும் வணிகம் செய்யலாம். ஆனால் மற்ற மாநில மக்கள் அங்கு வணிகம் செய்ய லைசென்ஸ் கிடைக்காது. ஆண்டுக்கு மத்திய அரசு உதவி 90000 கோடி ரூபாய். ஆனால் வளர்ச்சி கிடையாது. தாழ்த்த பட்டவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. முக்கியமான தொழில் கல் எறிவது. பொது சொத்தை சேதப்படுத்துவது. இதை எல்லாம் ஒரு மதம் சிகுலர் அரசியல்வாதிகள் நம்மை எப்படி ஏமாற்றி உள்ளனர்? வெட்க கேடு
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஜன-202017:26:28 IST Report Abuse
Malick Raja மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று .. இறைவன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று . அதிலும் ஓய்வு வேறு வரப்போகிறது . வரலாற்று சிறப்புக்கள் ஒரு அமெரிக்கன் டாலர் 72.00 . .. பெட்ரோல் ,டீசல் விலைகள் .. வெங்காயத்தின் விலை ..எரிவாயு உருளைவிலை .. ஜிஎஸ்டி .. சிஜிஎஸ்டி .. டோல் வரிகள் .. இப்படி பல வரலாற்று சிறப்புக்களையும் சொல்லி இருக்க்கலாமே ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X