பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஜன 15, 2020
Advertisement

அஞ்சலகத்தை நகரில் அமைக்கணும்! குமாரபாளையம் தலைமை அஞ்சலகம் சவுண்டம்மன் கோவில் எதிர் வீதியில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலக கட்டடம் பழுதானதால், தற்போது தனியார் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இதில் உடன்பாடில்லை. ஓய்வூதியம் பெறுபவர்கள் உள்பட பலரும் பழைய அலுவலகத்தில் தங்கள் பணிகளை செய்து வர உதவியாக இருந்தது. நகர எல்லைக்குள் வேறு இடத்தில் அஞ்சலகத்தை அமைக்க வேண்டும்.

- கே.காமராஜ், குமாரபாளையம்.

சாலையில் திரியும் குதிரைகளால் விபத்து: குமாரபாளையம், தம்மண்ணன் சாலை அய்யன் தோட்டம் பகுதியில் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் குதிரைகள் திரிந்து வருகின்றன. அவை, வாகன ஓட்டிகளை துரத்துவதும், குடியிருப்பு வாசிகளை கடிப்பதுமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குதிரைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ராஜ்குமார், குமாரபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X