பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

சேந்தமங்கலம்: காளப்பநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
சேந்தமங்கலம் தாலுகா, காளப்பநாயக்கன்பட்டி அடுத்த நஞ்சுண்டாபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளி முன் இருபாலர் படிக்கும் வகையில் இருந்தது. பின் மாணவர்களுக்காக அதே பள்ளி, மாணவியருக்கு காளப்பநாயக்கன்பட்டி, திருமலைப்பட்டி பிரிவு சாலையில் புதிய பள்ளி செயல்பட துவங்கியது. இந்நிலையில், அப்பள்ளியில், 1994 முதல், 2001 வரை, ஆறாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த மாணவ, மாணவியர் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. தற்போதைய தலைமையாசிரியர் புஷ்பராசு தலைமை வகித்தார். 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், அவர்களது குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த, 30 ஆசிரியர்களும் பங்கேற்று, பழைய அனுபவங்களையும் நெகிழ்ச்சியான சம்பவங்களையும் பகிந்துகொண்டனர். முன்னாள் மாணவ, மாணவியரின் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X