கல்வித்துறை சார்பில் பொங்கல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வித்துறை சார்பில் பொங்கல் விழா

Added : ஜன 15, 2020

நாமக்கல்: நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கல்வித்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்களில் பொங்கல் வைத்து சூரிய வழிபாட்டை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், நேற்று காலை, 11:00 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டு சூரியனுக்கு படையலிடப்பட்டது. பின்னர், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வினியோகிக்கப்பட்டது. இதில், முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் உதயகுமார் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் புத்தாடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X