பொது செய்தி

தமிழ்நாடு

இன்று பொங்கல் பண்டிகை பொருட்கள் விற்பனை கனஜோர்

Added : ஜன 15, 2020
Advertisement

நாமக்கல்: பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நாளை மாட்டுப் பொங்கல், நாளை மறுநாள் காணும் பொங்கல் உள்ளிட்டவை கொண்டாடப்படவுள்ளன. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மஞ்சள் கொத்து, பனங்கிழங்கு, வண்ண கோலப்பொடிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் மக்கள் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வர். இதையொட்டி, கரும்பு மற்றும் இதர பொருள்கள் விற்பனை கடந்த இரு நாள்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையம், ப.வேலூர், காரவள்ளி பகுதிகளில் இருந்தும், சேலம் மாவட்டம் மேட்டூர், இடைப்பாடி பகுதிகளில் இருந்தும் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் நாமக்கல் பகுதிகளில், இரு கரும்பு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. அதேபோல், நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி, காரவள்ளி, பேளுக்குறிச்சி பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் கொத்துகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு கொத்து, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வீடுகளின் முன்பாகவும், கால்நடைகளுக்கு கட்டும் காப்புக் கட்டுப்பூ, ஆவாரம் பூ உள்ளிட்டவை, கட்டு, 10 ரூபாய் என விற்கப்பட்டது. மாட்டுப் பொங்கலின்போது கால்நடைகளுக்கு தேவையானவற்றை விவசாயிகள் வாங்கி சென்றனர். இது மட்டுமின்றி, சுவாமிக்கு படையலிட ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழை உள்ளிட்ட பழங்களின் விற்பனையும் அதிகளவில் நடந்தது. மல்லிகை, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களும் அதிகம் விற்பனையாகின. பஸ் ஸ்டாண்டில் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X