சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் கழுத்தறுத்து கொலை: திருச்செங்கோட்டில் ஜோதிடர் சரண்

Added : ஜன 15, 2020
Advertisement

திருச்செங்கோடு: இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்ததாக கூறி, ஜோதிடர் ஒருவர் திருச்செங்கோடு தாசில்தாரிடம் சரணடைந்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, ஆண்டிவலசை சேர்ந்த குடுகுடுப்பைக்காரர் கந்தசாமி மகள் வெள்ளையம்மாள், 21, கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். 'இவரை காணவில்லை' என, கடந்த, 12ல் திருச்செங்கோடு ரூரல் போலீசில் கந்தசாமி புகார் அளித்தார். இந்நிலையில், வெள்ளையம்மாளை கொன்றதாக கூறி, கொசவம்பட்டி அன்னை செட்டியார் நகரை சேர்ந்த குடுகுடுப்பை அடித்து ஜோதிடம் சொல்லும் தொழில் செய்து வந்த முத்து, 25, திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேலுவிடம், நேற்று முன்தினம் சரணடைந்தார்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: வெள்ளையம்மாளிடம், பழகி வந்த முத்து, நகை மற்றும் பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வெள்ளையம்மாள், முத்துவை வலியுறுத்தியுள்ளார். எனவே, திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து, திருச்சியை அடுத்த மணச்சநல்லூர் துடையூர் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வெள்ளையம்மாளை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இவருக்கும் வாக்கு வாதம் ஏற்படவே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, வெள்ளையம்மாள் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆற்றங்கரை ஓரத்திலேயே உடலை புதைத்துள்ளார். வெள்ளையம்மாளை போலீசார் தேடுவதை அறிந்து, சரணடைந்தார். வெள்ளையம்மாள் நகைகளை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. அந்த நகை என்ன ஆனது, முத்து மட்டுமே தொடர்புடையவரா அல்லது வேறு யாராவது உடனிருந்தனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X