சாலையோர மண் சரிவு சரி செய்யப்படுமா?| Dinamalar

சாலையோர மண் சரிவு சரி செய்யப்படுமா?

Added : ஜன 15, 2020

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், ஆத்துமேடு பஸ் நிறுத்தம் அருகே கடந்த பல வருடங்களாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வாகனஓட்டிகள் எதிர்வரும் வாகனங்களுக்கு வழிவிடும் நோக்கில் சாலையை விட்டு தள்ளிசென்றால், மண்சரிவில் விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். பொதுமக்களுக்கும் சாலையின் ஓரத்தில் நடந்து செல்லும்போது, தவறி விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர். எனவே, 'மண்சரிவை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, மக்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X