தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால் அச்சம்

Added : ஜன 15, 2020
Share
Advertisement
எலச்சிபாளையம்: எளையாம்பாளையத்தில், சாலை நடுவே தாழ்வாக செல்லும் மின்ஒயர்களால், விபத்து அச்சம் உருவாகியுள்ளது.எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை எளையாம்பாளையத்தில் இருந்து, நெய்காரம்பாளையம் செல்லும் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. குறிப்பாக, இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரிகள் பெருமளவில் உள்ளதால், அதிகளவில் டிப்பர் லாரிகளில்

எலச்சிபாளையம்: எளையாம்பாளையத்தில், சாலை நடுவே தாழ்வாக செல்லும் மின்ஒயர்களால், விபத்து அச்சம் உருவாகியுள்ளது.
எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை எளையாம்பாளையத்தில் இருந்து, நெய்காரம்பாளையம் செல்லும் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. குறிப்பாக, இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரிகள் பெருமளவில் உள்ளதால், அதிகளவில் டிப்பர் லாரிகளில் கற்களை விற்பனைக்காக ஏற்றிக்கொண்டு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்கின்றனர். எளையாம்பாளையத்திலிருந்து நெய்காரம்பாளையம் செல்லும் சாலையின் நடுவே ஒருகம்பத்தில் இருந்து மற்றொரு கம்பத்திற்கு மின்சார ஒயர்கள் தாழ்வான நிலையில் சென்று கொண்டுள்ளது. அச்சமயங்களில், ஒயர்களில் கனரக டிப்பர்லாரிகள் உரசி மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால், பொருள் மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்ஒயர்களை உயரமாக கொண்டு செல்ல, பஞ்சாயத்து மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X