ரேஷன் கடை அருகே சுகாதார சீர்கேடு

Added : ஜன 15, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: குமரவேலிபாளையத்தில், ரேஷன் கடை அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எலச்சிபாளையம் ஒன்றியம், தொண்டிபட்டி பஞ்., குமரவேலிபாளையத்தில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ரேஷன் கடை அருகே உள்ள பள்ளத்தில் பகுதியினர் குப்பையை கொட்டுகின்றனர். அதுமட்டுமல்லாது, சில சமயங்களில் அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதால், ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள், அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவ்விடத்தில் குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X