பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஜன 15, 2020
Share
Advertisement

தினமும் குடிநீர் வினியோகம் தேவை: கரூர் நகராட்சி தான்தோன்றிமலை பகுதியில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. ஆனால், நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், பொதுமக்கள் போதிய தண்ணீர் இல்லாமல், அவதிப்படுகின்றனர். எனவே, நாள்தோறும் தண்ணீர் வழங்க வேண்டும். மேலும், இப்பகுதியில் உள்ள மண் சாலைகளை, தரம் மிகுந்த தார்ச்சாலைகளாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வி.நகுளன், தான்தோன்றிமலை

மினி பஸ்களில் அதிக பயணிகள் பயணம்: கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 60க்கும் மேற்பட்ட மினி பஸ்கள், தான்தோன்றிமலை, காந்தி கிராமம், ஏமூர், அரசு கலைக்கல்லூரி, புன்னம், குப்பிச்சிபாளையம், கோடங்கிப்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பயணம் செய்கின்றனர். அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவதால், படியில் தொங்கியபடி, பயணம் செய்வதால், விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.

- ரா.முல்லையரசு, ஏமுர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X