அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

Added : ஜன 15, 2020

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. தலைமையாசிரியர் வைரமூர்த்தி தலைமை வகித்தார். வரும், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள், வரும் கல்வியாண்டில் அதிகமான மாணவர்கள் சேர்க்கை, பள்ளி வளாகம் தூய்மை பராமரிப்பு, மாணவர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்குதல், மாணவர்கள் ஒழுங்கு கட்டுப்பாடு பற்றி விவாதிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் மணிகண்டன், உதவி தலைமையாசிரியர் பாலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X