பொது செய்தி

தமிழ்நாடு

தகவல் பலகை, பூங்கா சீரமைப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

கரூர்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பழுதான தகவல் பலகை சீரமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆசாத் பூங்கா சீரமைக்கப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் நுழைவு வாயிலாக உள்ள, கரூர் வழியாக நாள்தோறும், 47 ரயில்கள் செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த, டிஜிட்டல் தகவல் பலகை சேதமடைந்தது. அதை ரயில்வே துறை அதிகாரிகள் சரி செய்யாததால், ரயில்கள் வரும் நேரம், புறப்படும் நேரம், ரயில்கள் நிற்கும் பிளாட்பாரம் குறித்த தகவல்களை பயணிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தகவல் பலகை சீரமைக்கப்பட்டு, ரயில்கள் குறித்த தகவல்களை பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கரூர் நகராட்சி அலுவலகம் எதிரே, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன் ஆசாத் பூங்கா கட்டப்பட்டது. அந்த பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள், சேதம் அடைந்ததால் பூட்டப்பட்டது. இதுகுறித்தும், நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தற்போது ஆசாத் பூங்காவில் நடைபயிற்சிக்காக நடை பாதை அமைத்தல், குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X