பொது செய்தி

தமிழ்நாடு

காளைகளின் விபரம்: பதிவேற்ற வேண்டும்

Added : ஜன 15, 2020
Advertisement

கரூர்: ''காளைகளின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்,'' என, ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் பேசினார்.
குளித்தலை அருகில், ராச்சாண்டார் ஆர்.டி., மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: வரும், 17ல் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விபரங்களை விழா அமைப்பாளர்கள் முன்னரே தெரிவித்து கால்நடை பராமரிப்புத் துறையினரிடம் அனுமதி பெறவேண்டும். விழாவில் பங்கேற்க உள்ள காளைகள், உரிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். திடல் அமைக்கப்படும் பகுதி, குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர் பரப்பு கொண்டதாக இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளின் திமிலை தழுவியபடி, 15 மீட்டர் தூரத்திற்கு செல்லவோ அல்லது, 30 வினாடிகள் தழுவியபடி அனுமதிக்க வேண்டும். வாடிவாசலில் இருந்து, 15 மீட்டர் பரப்பளவுக்கு தளம் முழுவதும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயங்கள் ஏற்படாதவாறு தேங்காய் நார் பரப்ப வேண்டும். விழாவில் பங்கேற்க உள்ள காளைகளின் விபரங்களை இணையதளம் வாயிலாக கால்நடை பராமரிப்புத்துறையினர் பதிவேற்றம் செய்ய வேண்டும். மருத்துவ பரிசோதனையின் போது காளைகள் சோர்வாகவோ நீர்ப்போக்குடனோ அமைதியற்ற நிலையில் காணப்பட்டால் அவைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார். எஸ்.பி., பாண்டியராஜன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X