பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் படுக்கை வசதி: தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

கரூர்: கரூரில், படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொழில் வளம் மிகுந்த நகராக கரூர் உள்ளது. ஜவுளி நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் மற்றும் கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் கரூரில் உள்ளன. அதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். தொழில் நிறுவனங்களில், மருத்துவ வசதிக்காக ஊதியம் பிடிக்கப்படும் நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு, சிகிச்சை அளிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. கரூரில், வாங்கல் சாலை புதுத்தெருவில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை காலை, 7:00 மணி முதல், 10:30 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை மட்டும் இயங்கி வருகிறது. அதில் படுக்கை வசதி கிடையாது. இதனால், அவசர கால நோயாளிகள் திருச்சி அல்லது சேலம் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனு ப்பி வைக்கப்படுகின்றனர். அதிநவீன ஸ்கேன் வசதியும் இல்லை. இதனால், தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது: கரூர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. சிறிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. ஒரு சில டாக்டர்கள் மட்டும் பணியில் உள்ளனர். நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் வருவது இல்லை. மேல் சிகிச்சைக்காக சென்னை, சேலம், திருச்சி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த கரூரில், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் படுக்கை வசதியை ஏற்படுத்தி, நவீன மருத்துவ கருவிகளை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X