பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜன 15, 2020
Advertisement

பயணிகள் ஆபத்தான பயணம்: கரூர் பகுதியில், பயணிகள் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில், அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதில், பயணிகள் தொங்கிக் கொண்டு, பின் பக்கங்களில் அமர்ந்து, ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆட்டோக்கள் படு வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முட்புதர்களின் நடுவில் தொட்டி: கரூர், திருமாநிலையூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சின்டெக்ஸ் தொட்டி அமைத்துள்ளனர். இதை சுற்றி, செடி, கொடிகள் முளைத்து ஆக்கிரமித்துள்ளன. இதனால், இப்பகுதியில் வசிப்பவர்கள், தண்ணீர் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது நிலவும் தண்ணீர் பிரச்னையால், வேறுவழியன்றி செடி, கொடிகள் இடையே தண்ணீர் பிடிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

பள்ளம் மேடான சாலையால் அவதி: கரூர், எம்.ஜி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு, சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பள்ளம், மேடான சாலையில் இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

சாலையில் குப்பை தேங்குவதால் நாற்றம்: கரூர், பசுபதிபுரம் சாலையில், ஓட்டல்கள், டீ கடைகளை சேர்ந்தவர்கள் குப்பைகயை கொட்டி விடுகின்றனர். இதை, உடனடியாக அகற்றுவது இல்லை. குப்பை சேகரிக்கும் தொட்டிகளும், சாலை பகுதியில் இல்லை. இதனால், சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பை, காற்றில் பறந்த வண்ணம் உள்ளது. வாகன ஓட்டிகள், நடந்து செல்கிறவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் பணியால் சாலை சேதம்: கரூர், நரசிம்மபுரம் சாலையில் குடிநீர் குழாய் சரி செய்ய பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிகள் முடிந்த பின், குழியை சரியாக மூடாமல், மணலை மட்டும் பரப்பி விட்டு சென்றுள்ளனர். இதனால், வாகனங்களில் செல்பவர்கள் திண்டாடுகின்றனர். இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில், இவ்வழியாக செல்பவர்கள், பள்ளம் இருப்பதை தெளிவாக தெரியாமல் தடுமாறி விழுகின்றனர். சாலையில் உள்ள பள்ளம் மேடுகளை சரிசெய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X