பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணைக்கு நீர் வரத்து குறைந்தது

Added : ஜன 15, 2020
Advertisement

கரூர்: மழை குறைவால், அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைகிறது. திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து, பாசனத்துக்காக கடந்த செப்., 20 முதல், 120 நாட்களுக்கு முறை வைத்து, ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கேரளா மாநிலம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 52 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, 35 கன அடி தண்ணீர் வந்தது. அறுவடை பணிக்காக, புதிய வாய்க்காலில் வினாடிக்கு, 440 கன அடி, அமராவதி ஆற்றில், 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 60.24 அடியாக இருந்தது.* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,280 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 8,460 கன அடி தண்ணீரும், மூன்று கிளை வாய்க்காலில், 820 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


* கார்வாழி ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு நேற்று காலை, நீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.64 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் வாய்க்காலில், 130 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X