பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு விழா: தணிக்கை குழுவினர் ஆய்வு

Added : ஜன 15, 2020
Advertisement

குளித்தலை: ஆர்.டி.மலையில், ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை கரூர் எஸ்.பி., ஆய்வு செய்தார்.
குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரன் கோவில் முன்பாக வரும், 17ல், 58வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. கரூர் கலெக்டர் அன்பழகன் உத்தரவின்படி, அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை, 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னிச்சையான தணிக்கை கமிட்டி அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முன்னாள் சப்-கலெக்டர் தர்மராஜ் தலைமை வகித்தார். முன்னதாக, ஜல்லிக்கட்டு காளைகளுக்கான வாடிவாசல் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் குறித்து ஆய்வு நடந்தது. தணிக்கை குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர். நேற்று காலை, 11:30 மணியளவில் கரூர் எஸ்.பி., பாண்டியராஜன் தலைமையில், போலீசார் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X