சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது; லாரி பறிமுதல்

Added : ஜன 15, 2020
Advertisement

குளித்தலை: குளித்தலை, காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் கடத்திய டாரஸ் லாரி பறமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை, கடம்பர் கோவில் காவிரி ஆற்றில், சிலர் தொடர்ந்து லாரியில் மணல் கடத்துவதாக கரூர் எஸ்.பி., திருச்சி டி.ஐ.ஐ?., பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, டாரஸ் லாரியில் சிலர் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததை கண்டதும், லாரி உரிமையாளர்கள் குளித்தலை அண்ணாநகரை சேர்ந்த மணிகண்டன், அவரது நண்பர் சுள்ளான் ஆகியோர் தப்பி விட்டனர். லாரி டிரைவர் குளித்தலை சுங்ககேட்டை சேர்ந்த் அசாருதீன், 22, கிளீனர் மணத்தட்டை சங்கிலிராயன் கோவிலை சேர்ந்த ராம்குமார், 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணலுடன் டாரஸ் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, குளித்தலை போலீஸ் ஸ்டேஷன் அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X