பொது செய்தி

இந்தியா

2019ம் ஆண்டின் ஐசிசி விருதுகள்; இந்திய வீரர்கள் ஆதிக்கம்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 2019ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் என ரோகித் சர்மாவும், சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டனாக விராத் கோஹ்லியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.





சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 2019ம் ஆண்டின் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை சேர்த்த இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்தாண்டு மொத்தம் 7 சதம் விளாசியுள்ளார். அதில் உலக கோப்பை தொடரில் மட்டும் 5 சதங்கள் அடித்தார். அதேபோல், 2019ம் ஆண்டு ஐசிசி.,யின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாக இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் கேலி செய்தனர். இதை கவனித்த விராத் கோஹ்லி, ஸ்மித்திற்கு ஆதரவு தரவேண்டும் என சைகை காண்பித்தார். இதற்காக கோஹ்லி, 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வங்க தேசத்திற்கு எதிரான டுவென்டி-20யில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட் வீழ்த்திய இந்திய அணியின் தீபக் சாஹர், சிறந்த பவுலராக தேர்வாகி உள்ளார்.





2019ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் விவரம்:


சிறந்த டெஸ்ட் வீரர்: பாட் கம்மின்ஸ் (ஆஸி.,)
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் சிறந்த வீரர்: பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
வளர்ந்து வரும் வீரர்: மார்னஸ் லபுசேன் (ஆஸி.,)
சிறந்த நடுவர்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கி.,)





ஒருநாள் போட்டிக்கான கனவு அணி:

விராத் கோஹ்லி (கேப்டன், இந்தியா), ரோகித் சர்மா(இந்தியா), ஷாய் ஹோப் (வெ.இண்டீஸ்), பாபர் ஆஸம் (பாக்.,), கேன் வில்லியம்சன் (நியூசி.,), பென் ஸ்டோக்ஸ் (இங்கி.,), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர், இங்கி.,), மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.,), ட்ரெண்ட் போல்ட் (நியூசி.,), முகமது ஷமி (இந்தியா), குல்தீப் யாதவ் (இந்தியா).


டெஸ்ட் போட்டிக்கான கனவு அணி:

மயங்க் அகர்வால் (இந்தியா), டாம் லாதம் (நியூசி.,), மார்னஸ் லபுசேன் (ஆஸி.,), விராத் கோஹ்லி (கேப்டன், இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.,), பென் ஸ்டோக்ஸ் (இங்கி.,), வாட்லிங் (கீப்பர், நியூசி.,), பாட் கம்மின்ஸ் (ஆஸி.,), மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.,), நெய்ல் வாக்னர் (நியூசி.,), நாதன் லியான் (ஆஸி.,)

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-ஜன-202008:54:47 IST Report Abuse
ஆரூர் ரங் கிரிக்கெட்டால் ஏமாறும் இங்குதான் அதிகம் எனபதால் பொருத்தமானதுதான்
Rate this:
Share this comment
Cancel
Samaniyan - Chennai ,இந்தியா
15-ஜன-202018:03:39 IST Report Abuse
Samaniyan Will there be an award for getting beaten badly?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X