பொது செய்தி

இந்தியா

பிரசவத்திற்காக கர்ப்பிணியை தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (14)
Advertisement
ArmyDay,kashmir, srinagar, pregnant, women, Modi, PmModi, narendramodi, Indianarmy, army,கர்ப்பணி, பிரசவம், ராணுவம், இந்தியராணுவம், வீரர்கள், ராணுவவீரர்கள், பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, காஷ்மீர், ஸ்ரீநகர்,

புதுடில்லி: காஷ்மீரில், பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணியை, கடும் பனிப்பொழிவிலும் 100 ராணுவ வீரர்கள் இணைந்து 4 மணி நேரம் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.




கர்ப்பிணியைத் சுமந்து சென்ற வீரர்கள்

காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீநகரை சேர்ந்த ஷமீமா என்ற கர்ப்பணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பனிப்பொழிவு காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த ராணுவ வீரர்கள் 100 பேர் மற்றும் பொது மக்கள் 30 பேர் உதவியுடன் ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி கொண்டு, பனிக்கட்டிகளுக்கு மத்தியில் வேகமாக நடந்து சென்றனர்.






சுமார் 4 மணி நேரம் நடந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஷமீமாவுக்கு குழந்தை பிறந்தது. அங்கு தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






இந்நிலையில், ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அந்த வீடியோவை ரி-டுவீட் செய்ததுடன் வாழ்த்தி மோடி வெளியிட்ட செய்தியில், நமது ராணுவ வீரர்கள் என்றும் வீரத்திற்கும், தொழில் தர்மத்திற்கும் பெயர் பெற்றவர்கள். நமது ராணுவத்தினரின் மனிதாபிமான குணம் என்றும் மரியாதைக்குரியது. எந்த சூழலிலும் மக்களுக்கு உதவி வேண்டுமென்றால் , நமது ராணுவ வீரர்கள் தங்களால் முடிந்த அத்தனையையும் செய்தவர்கள். நமது வீரர்களை நினைத்து பெருமையாக உள்ளது. ஷமீமா மற்றும் அவரது குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
15-ஜன-202021:31:28 IST Report Abuse
Nallavan Nallavan இங்கே ராணுவத்தை இழிவாகப் பேசிய பச்சை வந்தேறிகள் கவனிக்க வேண்டிய விஷயம் ..... ஷமிதா எங்கள் சகோதரி என்று ராணுவத்தினர் உணர்த்தி விட்டனர் .....
Rate this:
Share this comment
Cancel
15-ஜன-202021:03:04 IST Report Abuse
ருத்ரா மனிதம் மிக்கவர்கள்.தலை வணங்குகிறோம் சகோதரர்களே.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
15-ஜன-202018:07:24 IST Report Abuse
வல்வில் ஓரி ஷமீமாவுக்கும் அவர் தம் குழந்தைக்கும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்... இவன் சங்கி ஓரி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X