நிர்பயா குற்றவாளி தூக்கை நிறுத்த டில்லி ஐகோர்ட் மறுப்பு

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (9)
Advertisement
Delhi, Nirbhaya, Jan22Hanging, Verdict, HighCourt, Hanging, நிர்பயா, டில்லி, ஐகோர்ட், தூக்குதண்டனை, குற்றவாளிகள், ஜனவரி22

புதுடில்லி: மருத்துவ மாணவி ' நிர்பயா' பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜன.,22ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

டில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். இதில், படுகாயமடைந்து மரணமடைந்தார். இந்த வழக்கில், வினய்சர்மா, முகேஷ் குமார், அக்சய் குமார், பவன் குப்தா ஆகியோருக்கு ஜன.,22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திஹார் சிறையில், தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிராக முகேஷ் குமார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால், நேற்று (ஜன.,14) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.

இதனையடுத்து, கருணை மனு தாக்கல் செய்துள்ளதால், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, டில்லி ஐகோர்ட்டில் முகேஷ் சிங் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்ததுடன், கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவில் எந்தப் பிழையும் இல்லை என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் திஹார் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ஒரு மரண குற்றவாளியின் தலைவிதி அவரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து பின்னரே இறுதி நிலைக்கு வருகிறது. கருணை மனுவை நிராகரித்த 14 நாட்களுக்கு பின்னர் தண்டனை நிறைவேற்ற வேண்டும். கருணை மனு நிலுவையில் இருப்பதால், ஜன.,22 ல் தூக்கு தண்டனை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என வாதிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜன-202018:37:27 IST Report Abuse
N.K (நான் தண்டக்கோண் இல்லை) தூக்குத்தண்டனை விதிக்கும்போதே, பேருக்கு ஒரு கருணைமனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி, நிராகரித்து வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அந்த தீர்ப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
15-ஜன-202017:34:31 IST Report Abuse
Pannadai Pandian UYIRUKKU PORAADUGIRAARGAL...…..instead of death sentence, long jail sentence is ok. will the government consider this barbaric death punishment go ???
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
15-ஜன-202016:35:46 IST Report Abuse
Subramanian Arunachalam இது ஒரு முடிவில்லா தொடர் கதை . தூக்கு தண்டனையை நிறுத்த மறுப்பு அது சரி . பிறகு எதற்காக கீழ்மை நீதி மன்றத்தை நாட வேண்டும் . வேண்டும் என்றே தண்டனையை நிறைவேற்ற ஒரு புது தடையை உயர் நீதி மன்றம் உருவாக்கி விட்டது கீழ்மை நீதி மன்றம் மீண்டும் ஒரு தீர்ப்பு அதற்கு மேல் முறையீடு உச்ச நீதி மன்றத்தில் முறையீடு மீண்டும் சீராய்வு மனு மீண்டும் மறு சீராய்வு மனு கருணை மனு என்று சுற்றி சுற்றி வருவதற்கு வாய்ப்புகள் இவர்கள் தூக்கில் தூங்குவதற்கு முன் இன்னும் ஒரு இருபது ஆண்டுகள் ஆகும் போல் உள்ளது . அதற்குள் ஆட்சி மாறினாலோ அல்லது ஏதாவது ஒரு தலைவர் அப்ஸல் குரு போன்ற தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்
Rate this:
Share this comment
15-ஜன-202018:39:05 IST Report Abuse
N.K (நான் தண்டக்கோண் இல்லை)காலவிரயம் இன்றி ஜனாதிபதி கருணைமனுவை உடனடியாக நிராகரித்தால், இதை சீராய்வு எல்லாம் அவசியமில்லாததாகிவிடும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X