பொது செய்தி

இந்தியா

மேக் இன் இந்தியா பொருட்கள் ஏற்றுமதிக்கு ரூ.70830 கோடி முதலீடு: அமேசான் சிஇஓ

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (17)
Advertisement
Amazon, CEO, JeffBezos, India, MakeinIndia, Invest, Delhi, NewDelhi, அமேசான், சிஇஓ, ஜெப்பெசோஸ், இந்தியா, மேக்இன்இந்தியா, புதுடில்லி, டில்லி, முதலீடு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய ரூ.70,830 கோடி முதலீடு செய்வதாக அமேசான் ஆன்லைன் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

உலக கோடீஸ்வரரும், பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரியுமான (சி.ஏ.ஓ.,) ஜெப் பெசோஸ், 3 நாள் சுற்றப்பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லி, ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்ற அவர், மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் அமேசான் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உலகின் போக்கை மாற்றிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தியது, சிறப்பான தருணமாக இருந்தது. இந்த 21ம் நூற்றாண்டு, இந்திய நூற்றாண்டாக இருக்கும் என கணிக்கிறேன்.





சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையில் அமேசான் நிறுவனம், 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7083 கோடி) முதலீடு செய்ய உள்ளது. மேலும், 2025ம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.70830 கோடி) மதிப்புள்ள இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும். இந்தியா, ஆற்றல், வளர்ச்சி, சுறுசுறுப்பு என தனித்துவமான சிறப்புமிக்க நாடு. இந்தியாவின் ஜனநாயகமும் பெருமைப்படத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
16-ஜன-202013:26:34 IST Report Abuse
Guna Gkrv 70 ஆயிரம் கோடி எந்த பாங்கில் கடன் கொடுத்தார்கள் என்று பாருங்கள் அவனும் வாங்கிக்கொண்டு ஓடிவிட போகிறான்
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
16-ஜன-202011:37:22 IST Report Abuse
Asagh busagh Amazon கம்பெனியை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் இந்திய சிறுதொழில் கூடங்கள் மிக குறைந்த செலவில் ஏற்றுமதியை செய்ய வழி வகுக்கும் platform என்பதை மறந்து விட வேண்டாம். அதற்கு தேவையான supply chain கட்டமைப்பை அமேசான் ஏற்படுத்தி அதில் தொண்டர்ந்து முதலீடும் செய்து வருகிறது. இதையெல்லாம் இந்திய அரசாங்கத்தாலோ, கம்பெனிகளாலோ கனவிலும் கூட நெருங்க முடியாது. தேவையே இல்லாம கடையை போட்டு இடத்தை அடைச்சு அசுத்தத்தையும், டிராபிக்கையும் பெருக்கும் உள்நாட்டு வியாபாரத்தை மட்டும் நம்பி 147 கோடி மக்கள் பிழைப்பை நடத்த முடியவே முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜன-202011:30:00 IST Report Abuse
Ramaraj P 10 லட்சம் கோடி ரூபாயும் காங்கிரஸ் எந்தவொரு சரியான ஆவணமும் இல்லாமல் கொடுத்தது.அந்த அனைத்து பணத்தையும் அடித்து பிடுங்க முடியாது ஏனென்றால் பிறகு யாரும் இந்தியாவில் தொழில் தொடங்க பயப்படுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X