அரசியல் செய்தி

தமிழ்நாடு

கால் நூற்றாண்டாக காலம் கடத்திய காரியக்காரர்: ரஜினியை சீண்டிய உதயநிதி

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (143)
Advertisement
DMK,Udhay,murasoli,Rajini,Rajinikanth,Udhayanidhi,UdhayanidhiStalin,Stalin,MKStalin,ரஜினி,ரஜினிகாந்த்,உதயநிதி,திமுக,முரசொலி

சென்னை: 'கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம் கடத்தி 'தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரர்' என நடிகர் ரஜினிகாந்தை, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சீண்டும் விதமாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

'துக்ளக்' இதழின், 50 ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'முரசொலி பத்திரிகையை ஒருவர் வைத்திருந்தால், அவர் தி.மு.க.,காரர் என்பர். ஆனால், துக்ளக் பத்திரிகை வைத்திருப்பவரை அறிவாளி என்பர். காலம் , அரசியல், சமுதாயம் ரொம்ப கெட்டுப்போச்சு' என பேசியிருந்தார்.





இந்நிலையில், பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ரஜினியை சீண்டும் விதமாக அவர் கருத்துக்களை பதிவிட, ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.





உதயநிதி டுவிட்டரில் பதிவிட்டதாவது: 'முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா - கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம் கடத்தி 'தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.க.,காரன். நான் தி.மு.க.,காரன். பொங்கல் வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
22-ஜன-202017:06:54 IST Report Abuse
Raj தன் சொந்த உழைப்பால் உயர்ந்தவர் ரஜினி.
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
20-ஜன-202017:46:09 IST Report Abuse
TAMILAN கால் நூற்றாண்டாக காலம் தமிழர்களில் பணத்தை கொள்ளை அடித்தவன் உங்க அப்பனும், தாத்தனும் . அதற்க்கு என்ன பதில்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் தென்றல் - சென்னை,இந்தியா
19-ஜன-202020:22:47 IST Report Abuse
தமிழ் தென்றல் உன் தாத்தா மூ க 1996 தேர்தல்ல ஆதரவு கேட்டு ரஜினி காலுல விழுந்ததா செய்திங்க. வரலாற மாத்துறதுல முரசொலி குரூப் கு 50 வருஷமாச்சே. முரசொலி கூட்டம் இப்படித்தானே பேசுவீங்க
Rate this:
Share this comment
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
21-ஜன-202014:02:39 IST Report Abuse
TAMILANதமிழக பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி எதிர் ஓட்டுக்களில் பெரும் பான்மை காங்கிரஸிற்ற்க்கு விழுந்தன எனறால் மத்தியில் மாற்று காட்சிகள் இல்லை. அதனால் டி.எம். கே வுக்கு எம் .பி சீட்டுகள் கிடைத்தன, இப்போதும் பி,ஜே,பி க்கு எதிர் ஓட்டுக்கள் காங்கிரஸிற்ற்க்கு தான், இதனால் தி.மு காவிற்கு கிடைக்க இருக்கும் கொஞ்சம் சீட்டுக்களும் கிடைக்காமல் போகும் , ஏன்னென்றால் கருணாநிதி எப்போதுமே தனித்து நின்று வெற்றி பெற்றதில்லை என்பது வரலாறு. தி.மு.க ஒரு மைனாரிட்டி கட்சியே. ஆரம்பத்தில் எம்..ஜி ஆர் உடைய தயவில் ஆட்சி, பின் எம்.ஜி.ஆர் பிரிந்து வந்த பொது மினாரிட்டி தெலுங்கர்களை வைத்து ஜெயிக்கவே முடியவில்லை, பின் எம்.ஜி.ஆர் இறந்த போது ஜே.ஜே. மற்றும் ஜானகி அம்மாளின் பிரிவால் வெற்றி. பின் ஜெ ஜெ இருக்கும் வரை பத்து அல்லது பதினைந்து ஜாதி மற்றும் மத கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் காலம் தள்ளி வந்தார், ஜெ அரசியல் நுணுக்கம் தெரிந்தவராக மாறிய பின்பு தி,மு,க ஜெயிக்கவும் இல்லை இப்போதும் காங்கிரசால், எ.டி.எம், கே, பிரிவால் தான் கொஞ்சம் சீட்டுக்கள் கிடைத்தன, ஆ,தி, மு,க ஒன்றானால் அல்லது காங்கிரஸ் கழண்டு கொண்டால் தி, மு,க கதி அம்போ தான், தி, மு,க தான் மினாரிட்டி என்பதை உணர வேண்டும், பிகு பண்ணியால் வேலைக்கு ஆகாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X