பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (3)
Advertisement
MakaraJyothi,sabarimala,sabarimala_makara_jyothi,ayyappan, மகரஜோதி, சபரிமலை, தரிசனம், பொன்னம்பலமேடு

சபரிமலை: சபரிமலை பொன்னம்பல மேட்டில் இன்று(ஜன.,15) மாலை 6.50 மணிக்கு, மகரஜோதி தெரிந்தது. ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை, லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன், சரண கோஷங்கள் முழங்க தரிசனம் செய்தனர்.





சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்குப் பிறகு மகரபூஜை விழா நடைபெறும். அதன் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் தை ஒன்றாம் தேதி(இன்று) நடந்தது. இதையொட்டி, பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட திருவாபரணங்கள், சரம்குத்தியில், தேவசம் போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் பதினெட்டாம்படி வழியாக எடுத்துச்செல்லப்பட்ட திருவாபரணங்கள், சுவாமி அய்யப்பனுக்கு, அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.





மகரவிளக்கு பூஜை நடந்து முடிந்ததும், மாலை 6.50 மணிக்கு பொன்னம்பலமேட்டில், ஜோதி வடிவில் மகரஜோதி தரிசனம் தெரிந்தது. மூன்று முறை தெரிந்த ஜோதி வடிவ ஐயப்ப தரிசனத்தை, லட்சக்கணக்கான பக்தர்கள், சரணகோஷம் முழங்க பரவசத்துடன் கண்டு தரிசித்தனர். ஜோதி தெரிந்ததும், 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற பக்தர்களின் சரணகோஷம் விண்ணைப் பிளந்தது.





மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்காக, 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-202009:16:39 IST Report Abuse
ருத்ரா மகிழ்ச்சியான தருணம், சரணம்.
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
16-ஜன-202004:31:05 IST Report Abuse
Kunjumani கம்மி அரசு அண்ணுப்பித்து வைத்த ஐட்டங்கள் சமூக போராளி பெண்கள் என்று போர்வையில் சன்னிதானத்தில் நுழைந்து அதன் புனிதம் கெடாமல் காத்த அய்யப்ப சாமிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நம் மத கலாச்சாரம் வழக்கொழியும் நிலையில் உள்ளது, அதனை கட்டிக்காத்த அந்தணர்கள், பல நல்ல ஆச்சரியர்களை நாம் ஒடுக்கி சமூக நீதியை நிலைநாட்டிவிட்டோம். அடுத்த தலைமுறை லிவிங் டுகெதர், பப் கலாச்சாரத்தில் முழுகிவிட்டனர். நம் தலைமுறை பெண்களோ தொலைகாட்சி சீரியல் கலாச்சாரத்தில் அதில் வரும் பெண்கள் வில்லிகள் என்று அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தால் கூட்டு குடும்பம் சிதைந்துவிட்டது. முதியோர் இல்லங்கள் காளான்களை போல முளைத்துவிட்டது. நமது வாரிசுகளின் எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Arunachalam Saptharishi - San Fransisco,யூ.எஸ்.ஏ
15-ஜன-202019:23:56 IST Report Abuse
Arunachalam Saptharishi சரணம் ஐய்யப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X