ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் ராஜினாமா| Dinamalar

ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் ராஜினாமா

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Russia,PM,DmitryMedvedev,VladimirPutin,Putin,Medvedev,PrimeMinister, ரஷ்யா, பிரதமர், ராஜினாமா

இந்த செய்தியை கேட்க

மாஸ்கோ: ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அதிபர் புடினிடம் அவர் வழங்கினார். பிரதமராக மெத்வதேவ் ஆற்றிய பணியை பாராட்டி, நன்றி தெரிவித்த அதிபர் புடின், மெத்வதேவின் நோக்கங்களை, பிரதமரின் கேபினட் நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபர் பாதுகாப்பு கவுன்சிலில், மெத்வதேவை அதிகாரியாக நியமிக்க புடின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமான திமித்ரி மெத்வதேவ், 2012 முதல் ரஷ்யாவின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். 2008 - 12ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X