ரூபாய் நோட்டின் மதிப்பு உயர வேண்டுமா? 'சாமி' ஐடியா

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (51)
Advertisement
SubramanianSwamy,GoddessLakshmi,Indian_currency, சுப்பிரமணியன்_சாமி, கடவுள், லட்சுமி, ரூபாய்_நோட்டு

கந்த்வா : ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.





ம.பி., மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தோனேஷியா பண நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்கட்டும்.





குடியுரிமை திருத்த சட்டத்தில் (சிஏஏ) தவறு ஒன்றும் இல்லை. காங்., கட்சியும், மகாத்மா காந்தியும், சிஏஏ.,வை வலியுறுத்தியிருந்தனர். 2003ல் மன்மோகன் சிங்கும் பார்லி.,யில் இச்சட்டத்தை கோரியிருந்தார். நாங்கள் இப்போது அதை அமல்படுத்தி உள்ளோம். ஆனால் பாக்., முஸ்லிம்களுக்கு சிஏஏ எதிராக உள்ளது எனக்கூறி காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதனை ஏற்க மறுக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜன-202017:03:03 IST Report Abuse
Endrum Indian இதை செய்தால் கள்ளநோட்டு பாகிஸ்தான் முஸ்லீம் நாடுகளில் அச்சிடப்படாது. ஆகவே கள்ள நோட்டு சமாச்சாரம் குறையும். ஆகவே இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவது குறையும். நாடு சுபீட்சமாகும். சரியான யோசனையா தான் சுவாமி. அதனுடன் இந்தியா என்று இருக்கின்றதே அதை இந்துஸ்தான் என்று செய்து விட்டால் நிச்சயம் இந்தியா மிக நல்ல நிலை அடையும் என்றும் சொல்லலாமே சுப்பு
Rate this:
Share this comment
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
16-ஜன-202015:00:34 IST Report Abuse
மனிதன் பிஜேபில இருக்குற எல்லோருமே இப்படியா???? இல்ல இப்படி இருக்குற எல்லோருமே பிஜேபிலதான் இருக்காங்களா???
Rate this:
Share this comment
Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா
18-ஜன-202014:40:12 IST Report Abuse
Anumanthan Gnanasekaranநீங்கள் மனிதனே இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
16-ஜன-202013:51:14 IST Report Abuse
Padmanaban Jayakrishnan நாடு இவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற கற்பனையில் வாழ்கிறார்கள் . இவர்களின் உலகமே வேறு ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X