சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: எவரெஸ்டில் புற்கள்

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1)
Advertisement

உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 19,600 அடி உயரம் வரை புற்கள், புதர்கள் காணப்படுகின்றன என பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1993- 2018 வரையிலான நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளை ஆராய்ந்து, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 13,600 அடி உயரத்தில் இருந்து 19,600 அடி உயரம் வரை நான்கு அடுக்குகளாக பிரித்து ஆய்வு செய்தனர். வெப்பநிலை உயர்வு மற்றும் பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என அவர்கள் தெரிவித்தனர். இமய மலை ஆண்டுதோறும் 8.60 கோடி கன மீட்டர் அளவு தண்ணீரை வழங்குகிறது.


தகவல் சுரங்கம்: நீண்ட கால பெண் பிரதமர்

---உலகில் நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்த பெண்மணி டேம் மேரி ஈஜெனியா சார்லஸ். இவர் கரீபியன் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான டொமினிகாவை சேர்ந்தவர். 1980 ஜூலை 21 - 1995 ஜூன் 14 வரை தொடர்ந்து அந்நாட்டின் பிரதமராக இருந்தார். டொமினிகாவின் முதல் பெண் வழக்கறிஞர் இவரே. 1919 மே 15ல் பிறந்த இவர், சட்டப்படிப்பு முடித்தவர். திருமணமாகாதவர். பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி 1960ல் போராட்டம் நடத்தினார். 1970ல் டொமினிகா சுதந்திர கட்சியில் சேர்ந்தார். 1975ல் எதிர்க்கட்சி தலைவரானார். 2005ல் மறைந்தார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.balakrishnan - chennai,இந்தியா
16-ஜன-202015:53:22 IST Report Abuse
v.balakrishnan பேரன்புடையீர் வணக்கம், அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா . நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X