சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'முதல்வரை கண்டு புயலுக்கு பயம்!'

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'முதல்வரை கண்டு புயலுக்கு பயம்!'

சட்டசபையில், கவர்னர் உரை மீது விவாதம் நடந்தது. இதில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு, மூன்று மாதங்களுக்கு முன்பே, முதல்வர், இ.பி.எஸ்., தயாராகி விட்டார்; அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மழையை எதிர்கொள்வதற்கு, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. 'இதை அறிந்தோ என்னவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், புயல் இல்லாமல், வடகிழக்கு பருவமழை விடை பெற்றுக் கொண்டது. நம் முதல்வரை கண்டு, புயலும் பயப்படுகிறது' என்றார்.

இதைக் கேட்ட, ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'முதல்வரை புகழ்ந்து தள்ளுறதுல, இவர் எல்லாரையும் துாக்கி சாப்பிட்டுருவார் போலிருக்கே' என, தங்களுக்குள் பேசி சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-ஜன-202006:06:05 IST Report Abuse
D.Ambujavalli உங்கள் ஜெ வைக்கண்டு அன்று 2015 இல் மஹா பிரளயமாக கொட்டிய மழை பயப்பட வில்லை பரவாயில்லை, முதல்வர் இயற்கையையே பயமுறுத்துகிறார் King Canute கதை படித்துப் பாருங்கள் அமைச்சரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X