சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கோவில் கோவிலாக யாகம் நடத்தும் அதிகாரிகள்!

Added : ஜன 15, 2020
Advertisement
கோவில் கோவிலாக யாகம் நடத்தும் அதிகாரிகள்!

''நாயரே, நேத்து நிறைய சர்க்கரை பொங்கலை சாப்பிட்டுட்டேன்... சூடா சுக்கு காபி போடும்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, ''தோல்விக்கு நீ தான் காரணம்னு புரட்டி எடுத்துட்டாவ வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார்.

''உள்ளாட்சித் தேர்தல் பஞ்சாயத்து இன்னும் முடியலையா பா...'' என்றார், அன்வர்பாய்.

''ஆமாம்... நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சி தலைவர் பதவிக்கு, ஆளுங்கட்சி சார்புல, கீதான்னு ஒரு பெண் போட்டியிட்டாங்க... அவங்களை எதிர்த்து, மல்லிகா ராணி போட்டியிட்டாங்க வே... ''மல்லிகாவுக்கு ஆதரவா, மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பவுலோஸ் ஓட்டு சேகரிச்சு, ஜெயிக்கவும் வச்சுட்டாரு... ''இதனால, கடுப்பான கீதாவின் வீட்டுக்காரர் கோபியும், அவரது ஆட்களும் சேர்ந்து, பவுலோசை சவட்டி எடுத்துட்டாவ... அவர், மருத்துவமனையில சிகிச்சை எடுத்துட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''நீலகிரி மாவட்டம் சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''ஊட்டியில, சமீபகாலமா, கால்வாய் ஓர ஆக்கிரமிப்புகள் அதிகமாயிட்டே போகுதுங்க... ''இது சம்பந்தமா, நகராட்சி நிர்வாகத்துக்கு, சமூக ஆர்வலர்கள் பலரும், ஆதாரங்களோட புகார்களை அனுப்புனாங்க... இது பத்தி, உள்ளூர் மீடியாக்கள்லயும் செய்திகள் வந்துச்சுங்க... ''ஆனாலும், பெயரளவுக்கு ஆய்வு நடத்துற நகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள் மேல நடவடிக்கை எடுக்க தயங்குறாங்க... ''விசாரிச்சா, ஆக்கிரமிப்பாளர்களுக்கு, அமைச்சர் தரப்பு வரைக்கும் செல்வாக்கு இருக்குன்னு சொல்றாங்க... இதனால, சுற்றுலா நகரமான ஊட்டி, ஆக்கிரமிப்பாளர்களின் சொர்க்கமா மாறிட்டு வருதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''நல்லபடியா கும்பாபிஷேகம் நடந்து முடியணும்னு, கோவில் கோவிலா வேண்டிண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தைச் சொல்றீங்களா...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஆமாம்... பிப்ரவரி, 5ம் தேதி, அங்கே கும்பாபிஷேகம் நடக்கப் போறதோல்லியோ... பந்தக்கால் முகூர்த்தம், பாலாலயம் எல்லாம் முடிஞ்சுடுத்து ஓய்... ''பாலாலயம் முடிஞ்சதுமே, சிவாச்சாரியார் ஒருத்தருக்கு கால் முறிஞ்சு போயிடுத்து... கோவில் கண்காணிப்பாளர் மாதவனுக்கு, அம்மை நோய் வந்துடுத்து ஓய்... ''இதனால, கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் எல்லாம் கலக்கத்துல இருக்கா... ''நல்லபடியா கும்பாபிஷேகம் நடந்து முடியணும்னு, தஞ்சையில இருக்கற முக்கியமான எட்டு காளி கோவில்கள்லயும் அதிகாரிகள் தரப்புல, சிறப்பு யாகமே நடத்தியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

அரட்டை முடியவும், நண்பர்கள் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X