பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜன 15, 2020
Advertisement
இதே நாளில் அன்று


ஜனவரி 16, 1920


நானி பல்கிவாலா: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 1920, ஜன., 16ல் பிறந்தார். சட்டம் பயின்ற இவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். வங்கிகள் தேசியமயமாக்கல், கல்வி நிறுவனங்களை நடத்த சிறுபான்மையின மக்களின் உரிமைகள், மன்னர் மானிய ஒழிப்பு, பத்திரிகைகளின் சுதந்திரம், மண்டல் குழு ஆகிய சிக்கல்கள் தொடர்பான வழக்குகளில், தன் சட்ட அறிவு, வாதத் திறமை ஆகியவற்றை நிலைநாட்டினார்.

அலகாபாதில், இந்திரா வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில், இந்திரா சார்பில் வாதிட்டார். ஆனால், இந்திரா நெருக்கடி நிலை அறிவித்தபோது, அதை எதிர்த்தார். இந்தியாவின், 'கட்ச்' பகுதியை, பாகிஸ்தான் உரிமை கோரிய வழக்கில், உலக அரங்கில், நாட்டிற்காக வாதிட்டார்.

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க நாட்டின் துாதராக, 1977 - 1979 வரை பணியாற்றினார். மும்பை, அண்ணாமலை பல்கலைகள், அம்பேத்கர் சட்ட பல்கலைகள், இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. பத்ம விபூஷண் விருது பெற்றவர். 2002, டிச., 11ல், மும்பையில் காலமானார்.

அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X