மம்தாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது வழக்கு

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Advertisement

கோல்கட்டா: கோல்கட்டாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை மாணவர்கள் முற்றுகையிட்டனர். அவர்களில் 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜன.௧௧ல் கோல்கட்டா வந்திருந்தார். அங்குள்ள துறைமுக பொறுப்பு கழகத்தின் ௧௫௦ம் ஆண்டு விழாவில் பங்கேற்கார். பிரதமர் மோடி தங்கியிருந்த இடத்திற்கு அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இடதுசாரி மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்தார்.

பிரதமரை சந்தித்த பின் வெளியே வந்த மம்தாவை இடதுசாரி மாணவர்கள் முற்றுகையிட்டு மோடியை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனக்கூறிய மம்தா மாணவர்கள் போராட்டத்திலும் சிறிது நேரம் பங்கேற்றார்.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற அடையாளம் தெரியாத 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் பொது சொத்துகளை சேதப்படுத்துதல் உட்பட ஜாமின் பெறமுடியாத சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X