பொது செய்தி

தமிழ்நாடு

விருதை தெப்பக்குளம் துார்வார கோரிக்கை

Added : ஜன 15, 2020
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் தெப்பக்குளத்தை துார்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள தெப்பக்குளத்தில் (அம்மன் குளம்), விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தின்போது தெப்பல் உற்சவம் நடக்கிறது. இதற்காக, மணிமுக்தாற்றில் இருந்து குளத்திற்கு தண்ணீர் வர ஏதுவாக வடிகால் இருந்தது.ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாக குளத்திற்கு வரும் பாதை தடைபட்டதால், நகராட்சி நிர்வாகம் மூலம் ராட்சத மின்மோட்டார்கள் வழியாக தண்ணீர் நிரப்பப்படும்.அப்போது, அந்த நேரத்தில் தண்ணீரில் மிதக்கும் குப்பையை, கண்துடைப்பாக அகற்றுவது வழக்கம். அதன்பின் தெப்பக்குளம் கவனிப்பாரற்று கிடப்பதால் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், குளம் முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், தெப்பக்குளக்கரை சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் நடந்து செல்லும் அளவிற்கு பாதை அமைத்து, அதன் இரு பகுதியிலும் இருப்பு கம்பிகள் மூலம் தடுப்பு போடப்பட்டது. ஆனால், சமூக விரோதிகளால் இரும்பு கம்பிகள் பெயர்த்து எடுக்கப்பட்டு விட்டது. தற்போது, தெப்பக்குளத்தில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுளளது.

எனவே, தெப்பக்குளத்தை துார்வாரி, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X