பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லிக்குப்பத்தில் சமத்துவ பொங்கல்

Added : ஜன 15, 2020
Advertisement

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

நெல்லிக்குப்பத்தில் ஐந்து பகுதிகளில் செயல்படும் வாசம் மகளிர் சுய உதவிக்குழுவினர் இணைந்து காமராஜர் நகரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். சுப்ரமணியன் தலைமை தாங்கினார். நகராட்சி அலுவலர் உமா முன்னிலை வகித்தார்.பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகமது சையது, ராஜலட்சுமி, சுசீலா, மதினாபேகம், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்மாறன், மோகன், அப்துல் ரஷீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புவனகிரிபுவனகிரி தாலுகா அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை சப் கலெக்டர் துவக்கி வைத்தார்.புவனகிரி தாலுகா அலுவலகத்தில், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சப் கலெக்டர் விசுமகாஜன் தலைமை தாங்கி சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். தாலுகா அலுவலக ஊழியர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை பொதுமக்களுடன் சேர்ந்து விளையாடினர்.தாசில்தார் சாத்தையன், தலைமையிடத்து துணை தாசில்தார் தமிழ்ச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தி, இளவரசி, செல்வநாயகி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X