பொது செய்தி

தமிழ்நாடு

செஸ் போட்டி பரிசளிப்பு விழா

Added : ஜன 15, 2020
Advertisement

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சென்னை திருமால் செஸ் அகாடமி சார்பில் நடந்த மாநில செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். திருமால் செஸ் அகாடமி தலைவர் ஸ்ரீமான், செயலர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். முதல்வர் புனிதவள்ளி வரவேற்றார். பெங்களூர் நிகிதா பில்ட் டெக் இயக்குனர், தொழிலதிபர் திருநாவுக்கரசு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். இரண்டு நாட்கள் நடந்த போட்டிகளில் கோவை, காஞ்சிபுரம், ஈரோடு, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 225 பேர் கலந்து கொண்டனர். 8,10, 12 மற்றும் 16 வயதிற்குட்பட்ட இரு பாலர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.

நான்கு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களில் ஆண்கள் பிரிவில் முதல் 20 நபர்கள், பெண்கள் பிரிவில் முதல் 10 நபர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X