காஷ்மீரில் மனித உரிமை மீறல் அமெரிக்க எம்.பி., கருத்து

Added : ஜன 15, 2020
Advertisement

வாஷிங்டன்: ஜம்மு - காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளால் அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்க எம்.பி. டெபி டிங்கெல் கருத்து தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 கடந்த ஆண்டு

ஆகஸ்ட் 5ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உட்பட பல எதிர்கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் முழுவதும் தொலைபேசி 'மொபைல்' மற்றும் 'இன்டர்நெட்' சேவைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டன.

நிலைமை சீரானதை தொடர்ந்து தடை உத்தரவுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆனால் இன்டர்நெட் மற்றும் மொபைல் சேவைகள் மட்டும் முழுமையாக செயல்பட துவங்கவில்லை. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கடந்த ஆண்டு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.அதற்கு ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் மற்றும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த 34 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. டெபி டிங்கெல் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜம்மு - காஷ்மீரில் பல முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் இருந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மக்கள் மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இது மனித உரிமை மீறலாகும். இந்த மீறலுக்கு அமெரிக்கா துணை நிற்காது என்பதை உலகுக்கு தெரிவிக்கவே தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X