ஈரான் மீதான தாக்குதல் பேரணி நடத்திய டிரம்ப்

Added : ஜன 15, 2020
Advertisement
ஈரான் மீதான தாக்குதல் பேரணி நடத்திய டிரம்ப்

மில்வாகி: மேற்கு ஆசிய நாடான ஈரானின் ராணுவ முக்கிய தளபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேரணி நடத்தினார்.

மேற்கு ஆசிய நாடான ஈராக் சென்ற ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான சுலைமானி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. 'அதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டிரம்ப் நடத்திய நாடகம் இது' என ஜனநாயகக் கட்சி விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன் 'காகஸ்' எனப்படும் பிரதிநிதிகள் தேர்வுக்கான தேர்தல் விஸ்கான்சின் மாகாணத்தில் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக குடியரசு கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஈரான் பிரச்னை குறித்தே டிரம்ப் அதிகம் பேசினார். அவர் பேசியதாவது:

உலகின் நம்பர் 1 பயங்கரவாதியாக செயல்பட்டதால்தான் சுலைமானி மீது நடவடிக்கை எடுத்தோம். மிகக் கொடூரமான பயங்கரவாதியான அவர் நூற்றுக்கணக்கானோர் சாவுக்கு காரணமானவர். இவரால் ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்துள்ளனர். இதுபோன்ற கொடூரனைக் கொன்றதால் நமக்கு நல்ல பெயர் கிடைத்து விடுகிறதே என்பதுதான் ஜனநாயகக் கட்சியினருக்கு எரிச்சல். அதனால் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X