பொது செய்தி

இந்தியா

டில்லியில் ராணுவ அணிவகுப்பு பெண் அதிகாரி வழிநடத்தி சாதனை

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற ராணுவ தின விழாவில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை முதல் முறையாக பெண் அதிகாரி ஒருவர் வழிநடத்தி சென்றார்.

கடந்த ௧௯௪௯ம் ஆண்டு இந்திய ராணுவ தளபதியாக கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜன. 15.ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி டில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நேற்று ராணுவ தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே விமானப்படை தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதவுரியா கடற்படைத் தலைமை அட்மிரல் கரம்பீர் சிங் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையொட்டி ராணுவத்தினர் பங்கேற்ற அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனை கேப்டன் டானியா ஷெர்கில் வழிநடத்தி சென்றார். பெண் ராணுவ அதிகாரி ஒருவர் அணிவகுப்பை வழிநடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதத்தககது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X