தமிழ்நாடு

உயர்ந்தது! மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்... நீர்நிலைகளை தூர் வாரியதால் பலன்

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 உயர்ந்தது!   மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்... நீர்நிலைகளை தூர் வாரியதால் பலன்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இடைவெளி விட்டு பெய்த பருவமழையை வீணாகாமல் பாதுகாத்ததன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் இதுவரை பெய்து வந்த வடகிழக்கு பருவமழை சில தினங்கள் முன் முடிவுற்றது. இருப்பினும் கடந்த ஆண்டு பருவமழை இடைவெளி விட்டு பெய்ததால் நீரை கணிசமாக சேமிக்க முடிந்தது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு மாவட்டத்தில் 1253.09 மி.மீ., மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரி மழை அளவைவிட கூடுதலாகும். மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் 383.10 மி.மீ., மழை பெய்ய வேண்டும். கடந்தாண்டு 481.86 மி.மீ., அளவிற்கு பெய்துள்ளது.

இது சராசரி அளவை விட 98.76 மி.மீ., கூடுதலாகும்.மாவட்டத்தில் கடந்தாண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப்பருவ மழை காலங்களில் மட்டும் ் 6.16 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் கடந்தாண்டு துார் வாரி சீரமைக்கப் பட்டதன் காரணமாகவும், மழை போதிய இடைவெளிவிட்டு ெபய்ததாலும், மழை நீர் வீணாக ஆறுகள் வழியாக ஓடி கடலில் கலக்காமல், நீர் நிலைகளில் தேங்கியது. அதேபோன்று, பொதுமக்களிடையே நீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக பல வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்திற்கும் மேலாக, ஆறுகளில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாவட்டத்தில் மழை சேதம் தவிர்க்கப்பட்டு, மழை நீர் அனைத்தும் பூமிக்கடியில் நீர் உறிஞ்சப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் 31 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வில் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு கடலுார் மாவட்டத்தில் 5.48 அடியாக இருந்த நீர்மட்டம், இந்த ஆண்டு 3.95 அடியாக குறைந்துள்ளது. அதாவது மாவட்டத்தில் 1.53 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 6.65 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் நடப்பு ஆண்டு 4.38 ஆக குறைந்துள்ளது. அதாவது 2.27 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் எஞ்சிய நீர் நிலைகளை இந்தாண்டு தொடக்கத்திலேயே துார் வாரி சீரமைக்கவும், அரசு அறிவித்துள்ள தடுப்பணை திட்டங்களை விரைந்து செயல்படுத்தினால், மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதோடு, கடல் நீர் உட்புகுவதை வெகுவாக தவிர்க்க முடியும்.

ஆதலால், மாவட்ட நிர்வாகம் நீர் நிலைகளை துார் வாரவும், தடுப்பணை பணிகளை விரைவுப்படுத்தவும், மழை நீர் சேகரிப்பு குறித்து மக்களிடையே மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜன-202018:23:05 IST Report Abuse
Bhaskaran அரசு அதிகாரிகள் எவ்வித மேல் நடவடிக்கையும் தானாக எடுக்க மாட்டார்கள் அவர்களை thaarkuchchi Pottu வாங்கணும்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜன-202018:18:48 IST Report Abuse
Bhaskaran அரசு அதிகாரிகள் எவ்வித மேல் நடவடிக்கையும் தானாக எடுக்க மாட்டார்கள் அவர்களை தாஜா பண்ணி வேலை வாங்கணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X