உக்ரைன் விமான விவகாரம்: புதிய 'வீடியோ' வெளியானது

Added : ஜன 15, 2020
Advertisement

வாஷிங்டன்: மேற்காசிய நாடான ஈரானில் அதன் ராணுவம் செலுத்திய ஏவுகணையால் ஐரோப்பிய நாடான உக்ரைனைச் சேர்ந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் புதிய 'வீடியோ' ஆதாரம் வெளியாகி உள்ளது.

ஈரானில் இருந்து உக்ரைன் சென்ற பயணியர் விமானம் சமீபத்தில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே விழுந்ததில் அதில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்தனர். ஈரான் அமெரிக்கா இடையேயான மோதலில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போது தவறுதலாக உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் ராணுவம் செலுத்திய இரண்டு ஏவுகணைகள் தாக்கி உக்ரைன் விமானம் தீப்பிடித்து வெடித்து சிதறியது தொடர்பான புதிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இதை அமெரிக்க பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அந்த விமானத்தை 30 விநாடிகள் இடைவெளியில் இரண்டு ஏவுகணைகள் தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. ஈரான் ராணுவ முகாமில் இருந்து சில கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த விமானம் வீழ்த்தப்பட்டு உயிரிழந்தோரில் பெரும்பாலானோர்

ஈரானைச் சேர்ந்தவர்கள். அதனால் ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது நேற்றும் தொடர்ந்தது.உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஈரான் அரசு சார்பில் விசாரண நடந்து வருகின்றது. இந்த விசாரணையில் பங்கேற்கும்படி ஐ.நா.வுக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி விசாரணையில் இணையவுள்ளதாக சர்வதேச விமானப் போக்கு வரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X