தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி : 'தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது' என அறிவிக்குமாறு சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






சத்தீஸ்கர் அரசு சார்பில் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் மாநில அரசின் அதிகாரங்களை நசுக்குவதாக அமைந்துள்ளது. வழக்குகளை போலீசை கொண்டு விசாரிக்கும் மாநில அரசின் உரிமையை இந்த சட்டம் பறிக்கிறது.

மேலும் மாநிலங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளில் தலையிட இச்சட்டம் மத்திய அரசுக்கு தடையற்ற அதிகாரங்களை அளிக்கிறது. எனவே இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.





குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்துக்கு எதிராக சத்தீஸ்கர் அரசு நேற்று மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
16-ஜன-202019:00:32 IST Report Abuse
Darmavan மைய அரசுக்கு கீழேதான் மாநில அரசுகள்.அதற்கு மாநில அரசின் மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது..
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜன-202017:04:18 IST Report Abuse
Endrum Indian உடனே கேரளா சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
16-ஜன-202011:28:47 IST Report Abuse
தமிழ்வேள் மாநில போலீஸ் தீவிரவாதிகளை கொஞ்சும் குலாவும் காசை கண்ணில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் தேச பாதுகாப்புக்கு மாநில போலீஸ் உதவாது [ கழக கண்மணிகளுக்கு குடை பிடித்த தமிழக போலீஸ் முன்னுதாரணம் ] எனவே மத்திய புலனாயிவு பிரிவே சரியானது ....அவர்களது நடவடிக்கைகள் மாநில போலீசுக்கு கூட தெரியாத அளவில் இருப்பத்தே தேச பாதுகாப்புக்கு நல்லது [மாநில போலீஸ் கிடைக்கும் தகவல்களை சில்லறைக்காக சட்டவிரோத அமைப்புகளுக்கு கசியவிடக்கூடிய தன்மையுடையவர்கல் ]
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X